கொல்கத்தா வந்த 9 தென் கொரிய போர் விமானங்கள் !!

  • Tamil Defense
  • August 12, 2022
  • Comments Off on கொல்கத்தா வந்த 9 தென் கொரிய போர் விமானங்கள் !!

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தென்கொரிய விமானப்படைக்கு சொந்தமான 9 போர் விமானங்கள் கொல்கத்தா நியூ டவுன் விமான நிலையம் வந்துள்ளன.

இவை இங்கிலாந்தில் நடைபெற்ற ஐரோப்பாவின் மிகப்பெரிய விமான கண்காட்சியில் பங்கேற்று விட்டு தென்கொரியா திரும்பி செல்லும் வழியில் கொல்கத்தாவில் ஒய்வு மற்றும் எரிபொருள் நிரப்ப நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்த 9 போர் விமானங்களும் தென்கொரிய ஏரோஸ்பேஸ் தொழிற்சாலை தயாரித்த T-50B ரக போர் விமானங்கள் ஆகும் இவை தென்கொரிய விமானப்படையின் Black Eagles சாகச குழுவை சேர்ந்தவை என்பது கூடுதல் தகவல் ஆகும்.

இந்த விமானங்கள் சாகச நிகழ்ச்சிகளில் ஈடுபட்டாலும் மற்றொரு புறம் தென்கொரிய போர் விமானிகளை பயிற்றுவிக்கும் பணியிலும் ஈடுபடுவது வழக்கமாகும்.