தெலுங்கானா PFI ஆயுத பயிற்சி, NIA விசாரணைக்கு உத்தரவு !!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நிஸாமாபாத் நகரில் கராத்தே வகுப்புகள் என்ற போர்வையில் PFI Popular Front of India எனும் அமைப்பு இஸ்லாமிய இளைஞர்களை மூளைச்சலவை செய்து ஆயுத பயிற்சி அளித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படி சுமார் 200 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆயுத பயிற்சி பெற்றுள்ளனர், இதையொட்டி கராத்தே பயிற்சியாளர் அப்துல் காதர் உட்பட ஐந்து பேரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்திய போது இவர்கள் உட்பட மொத்தமாக சுமார் 25 பேர் இந்த சதித்திட்டத்தில் பங்கு உடையவர்கள் என தெரிய வந்துள்ளது.

இதையொட்டி தற்போது NIA எனப்படும் தேசிய புலனாய்வு முகமைக்கு இந்த விவகாரம் குறித்து தீவிரமாக விசாரணை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது பற்றி ஒரு மூத்த NIA அதிகாரி ஒருவர் பேசும்போது இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் அனைவர் மீதும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் எனவும், இவர்கள் நிஸாமாபாத் மாடலை போல பல்வேறு மாவட்டங்களில் ஆயுத பயிற்சி அளிக்க திட்டமிட்டு இருந்ததும் தெரிய வந்துள்ளதாக கூறினார்.

மேலும் அவர் பேசுகையில் இப்படி கராத்தே வகுப்புகள் நடத்தி ஆயுத பயிற்சி அளிக்கும் நிகழ்வு வெளிச்சத்திற்கு வந்துள்ளது இதுவே முதல்முறை எனவும் கராத்தே இல்லாமல் பல்வேறு வகையான ஆயுதங்களை எப்படி பயன்படுத்துவது என பயிற்சி அளித்ததோடு மட்டுமின்றி

அடிப்படைவாத சிந்தனைகள் மற்றும் கருத்துக்களை படிக்க வைத்து இளைஞர்களை மூளைச்சலவை செய்து அதன்மூலம் மற்ற மதங்கள் மீது வெறுப்புணர்ச்சியை ஊட்டியுள்ளனர் இவர்களை கொண்டு மத பிரச்சனைகளை உருவாக்கவும் திட்டமிட்டு உள்ளனர் என தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை நிஸாமாபாத் நகரில் உள்ள குன்டாராம் பகுதியில் வசிக்கும் ஷாதுல்லா என்பவரின் வீட்டில் இருந்து மூன்று PFI உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர், இவர்கள் அந்த பகுதியில் மெக்கானிக் தொழில் செய்பவர்கள் போல் செயல்பட்டு வந்துள்ளனர்.

அப்படி இருந்து கொண்டு இஸ்லாமிய இளைஞர்களை தேர்வு செய்து அவர்களுக்கு அடிப்படைவாத ஷரியா கருத்துக்களை புகட்டி ஆயுத பயிற்சியும் அளித்துள்ளனர், இதே போன்று ஹைதராபாத், ஜகித்தியால், நெல்லூர், குர்னூல் மற்றும் கடப்பா ஆகிய நகரங்களிலும் இயங்கி இஸ்லாமிய இளைஞர்களை தேசிவிரோத செயல்களில் ஈடுபட தூண்டியுள்ளனர்.