ஜம்மு காஷ்மீரில் 8 இடங்களில் NIA தேசிய விசாரணை முகமை சோதனை !!

  • Tamil Defense
  • August 21, 2022
  • Comments Off on ஜம்மு காஷ்மீரில் 8 இடங்களில் NIA தேசிய விசாரணை முகமை சோதனை !!

சமீபத்தில் பாகிஸ்தானில் இருந்து வந்த ஆளில்லா விமானம் மூலமாக கொண்டு வரப்பட்ட ஆயுத குவியல் தொடர்பான வழக்கில் ஜம்மு காஷ்மீரில் 8 இடங்களில் தேசிய விசாரணை முகமை சோதனை.

மேற்குறிப்பிட்ட ஆயுதங்களை பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத இயக்கமான லஷ்கர் இ தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான TRF – The Resistence Front அமைப்பிற்காக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இதனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சோதனைகள் ஜம்மு நகரில் உள்ள பயங்கரவாதி ஃபைசல் மூனீருடைய வீட்டில் சோதனை நடத்தப்பட்ட மறுநாள் ஜம்மு காஷ்மீர் முழுவதும் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடத்தி வரப்பட்ட ஆயுதங்கள் எல்லாம் காஷ்மீரில் உள்ள The Resistance Front அமைப்பின் பயங்கரவாதிகளுக்கு தாக்குதல் நடத்த குறிப்பாக மைனாரிட்டிகள் மீது தாக்குதல் நடத்த சப்ளை செய்யப்படுவதாக தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.