துருக்கி நாட்டின் ஆரெஸ் கப்பல் கட்டுமான தளம் Ares Shipyards ஆளில்லா அமைப்புகளை உருவாக்கும் பணியில் மெடெக்ஸான் டிஃபன்ஸ் தொழிற்சாலை Meteksan Defence Industry நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வந்தது.
அதன் படி ULAQ உலாக் எனும் திட்டத்தின் கீழ் AUSV Armed Unmanned Surface Vessel ஆளில்லா தாக்குதல் படகு ஒன்று தயாரிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு Sea Wolf என்ற கடற்படை போர் ஒத்திகையில் முதல்முறையாக இந்த அமைப்பு சோதனை செய்யப்பட்டது, அப்போது துருக்கியின் கடற்படை ஏஜியன் கடல் மற்றும் மத்திய தரைக்கடல் ஆகிய இரண்டு பகுதிகளில் இவற்றை பயன்படுத்தி பார்த்தது.
Roketsan நிறுவனம் தயாரித்த 4 Cirit ஏவுகணைகள், 2 டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் அல்லது ஒரு koralp 12.7 மில்லிமீட்டர் நீளம் கொண்ட ஆயுத அமைப்பு ஆகியவற்றை கொண்டிருக்கும் எனவும்
கப்பல் எதிர்ப்பு நீர்மூழ்கி எதிர்ப்பு, பாதுகாப்பு, உளவு, கண்காணிப்பு போன்ற பணிகளை மேற்கொள்ள வல்ல இந்த அமைப்பு அதிகபட்சமாக 400 கிலோமீட்டர் வரை பயணிக்கும் உச்சபட்சமாக மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் எனவும்,
இரவிலும் பகலிலும் தடங்கல் இன்றி இயங்கும் திறன் கொண்ட இதனை தரையிலிருந்தோ, கப்பல்களில் இருந்தோ கட்டுபடுத்தி கொள்ள முடியும், சுய நுண்ணறிவு AI தொழில்நுட்ப அமைப்புகளும் இதில் உள்ளதாக கூறப்படுகிறது.