இந்திய தரைப்படைக்கு புதிய தொலைதூர தாக்குதல் ராக்கெட் தயாரிக்க திட்டம் !!
இந்திய தரைப்படை ஏற்கனவே பினாகா மார்க்-1 மற்றும் பினாகா மார்க்-2 PINAKA MK1 , PINAKA MK2 எனும் இரண்டு வகையான ராக்கெட் அமைப்புகளை பயன்படுத்தி வருகிறது, இவை முறையே 37-45 கிலோமீட்டர் மற்றும் 60-90 கிலோமீட்டர் தூரம் வரையும் பாயக்கூடியவை ஆகும்.
இந்த நிலையில் சீனா தற்போது தனது படைகளில் இணைத்துள்ள AR-3 மற்றும் PHL-03 ஆகிய பல குழல் ராக்கெட் அமைப்புகள் முறையே 100-220கிலோமீட்டர் மற்றும் 70-130 கிலோமீட்டர் தொலைவு பாயக்கூடியவை ஆகும்.
மேலும் சீனாவிடம் சுமார் 260 கிலோமீட்டர் தொலைவு வரை சென்று தாக்குதல் நடத்தக்கூடிய ராக்கெட் அமைப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது இத்தகைய விஷயங்கள் இந்திய ராணுவ உயர்மட்ட அதிகாரிகளுக்கு அதிகதொலைவு பாய்ந்து சென்று தாக்கும் ராக்கெட் அமைப்புகளை உருவாக்கும் அவசியத்தை உணர்த்தி உள்ளன.
அந்த வகையில் சுமார் 200 முதல் 250 கிலோமீட்டர் தொலைவு வரை பாய்ந்து சென்று தாக்குதல் நடத்தக்கூடிய மேம்படுத்தப்பட்ட தொலைவு நீட்டிக்கப்பட்ட புதிய PINAKA MK3 ER (Extended Range) ராக்கெட்டுகளை உருவாக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே PINAKA MK3 எனும் 120 கிலோமீட்டர் தொலைவு சென்று தாக்குதல் நடத்தக்கூடிய ராக்கெட்டுகளை நமது DRDO பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உருவாக்கி வருவது கூடுதல் தகவல் ஆகும்.