அமெரிக்க Lockheed Martin நிறுவனத்தின் புதிய லேசர் ஆயுதம் !!

அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் Lockheed Martin நிறுவனம் ஒரு பல அடுக்கு லேசர் பாதுகாப்பு அமைப்பை தரை கடல் வான் என முன்று பரிமாணத்திலும் இருக்கும் வீரர்களை பாதுகாக்கும் வகையில் உருவாக்கி வருகிறது.

இந்த பல அடுக்கு லேசர் பாதுகாப்பு அமைப்பானது ஒரு மைல் தொலைவில் வரும் சிறிய ராக்கெட்டுகள், பிரங்கி குண்டுகள், மோர்ட்டார் குண்டுகள், சிறிய ஆளில்லா விமானங்கள், சிறிய தாக்குதல் படகுகள் மற்றும் இலகுரக சண்டை வாகனங்கள் ஆகியவற்றை அழிக்கும் திறன் கொண்டதாகும்.

இந்த லேசர் பாதுகாப்பு அமைப்புகள் மிகவும் துல்லியமானவை ஆகும் மேலும் எதிர்காலத்தில் இத்தகைய லேசர் ஆயுதங்களின் திறன்கள் அதிகரிக்கப்படும் எனவும் இதன் மூலம் தூரத்தில் உள்ள பெரிய இலக்குகளை கூட அழிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.