பிரிட்டிஷ் காலணி அடையாளத்தை விட்டு நீங்கும் வகையில் இந்திய கடற்படைக்கு புதிய கொடி !!

இந்திய கடற்படையின் தற்போதைய கொடியில் ஒரு சிகப்பு சிலுவை உள்ளது இது புனித ஜார்ஜ் என்பவருடைய சிலுவை உள்ளது சிலுவையின் வலது பக்கம் மேல்பகுதியில் இந்திய கொடியும் சிலுவையின் நடுவில் சார்நாத் சிங்கங்களும் உள்ளது.

இது பிரிட்டிஷ் கடற்படையின் சின்னமாகும் இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த போதிருந்தே இந்த சிலுவை இந்திய கடற்படைக்கும் வந்து சேர்ந்தது சுதந்திரம் அடைந்த பிறகும் இது இன்று வரை இந்திய கடற்படை கொடியில் இடம்பெற்றுள்ளது.

இனி உருவாக்கப்படும் கொடியில் சோழர்கள் முதல் மராத்தியர்கள் வரையிலான மிகவும் நீண்ட இந்திய கடல்சார் பாரம்பரியத்தை குறிக்கும் வகையில் சில வண்ணங்கள் சேர்க்கப்பட்டு இந்திய கடற்படை சின்னம் கொண்ட கொடி ஒன்று உருவாக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த புதிய கொடியை வருகிற செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி கொச்சியில் INS VIKRANT விமானந்தாங்கி போர் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைக்க உள்ளார் என இந்திய கடற்படை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.