70 ஆயிரம் டன் விமானந்தாங்கி கப்பல் கட்டுவதற்கான கட்டுமான தளம் இந்த ஆண்டு தயார் !!

  • Tamil Defense
  • August 3, 2022
  • Comments Off on 70 ஆயிரம் டன் விமானந்தாங்கி கப்பல் கட்டுவதற்கான கட்டுமான தளம் இந்த ஆண்டு தயார் !!

கொச்சி கப்பல் கட்டுமான தளத்தில் இந்த ஆண்டு சுமார் 70,000 டன்கள் எடை கொண்ட விமானந்தாங்கி கப்பலை கட்டும் அளவிலான கட்டுமான தளம் DRY DOCK தயார் ஆகும் என கூறப்படுகிறது.

CSL – Cochin Shipyards Limited நிறுவனமானது தேவாரா பகுதியில் இந்த பிரமாண்ட கப்பல் கட்டும் தளத்தை Dry Dock கட்டி வருகிறது, சுமார் 310 மீட்டர் நீளமும் 75 மீட்டர் அகலமும் கொண்ட இந்த தளமானது 1700 கோடி ரூபாய் செலவில் கட்டமைக்கப்பட்டு வருகிறது.

இந்த பிரமாண்ட கப்பல் கட்டுமான தளத்தில் விமானந்தாங்கி கப்பல் மட்டுமின்றி 70000 அளவிலான எண்ணெய், எரிவாயு கப்பல்கள், போன்ற இதர கலன்களையும் கட்ட முடியும் என்பது கூடுதல் சிறப்பாகும்.

கொச்சி கப்பல் கட்டுமான தளம் இந்திய கடற்படை விரும்பினால் ஐந்தே ஆண்டுகளில் விக்ராந்தை போன்ற மற்றொரு விமானந்தாங்கி கப்பலை இந்திய கடற்படைக்கு கட்டி கொடுக்க தயார் என அறிவித்துள்ளது.

இந்திய கடற்படையோ நிதி பற்றாக்குறை காரணமாக 70000 டன்கள் அளவிலான கப்பலில் இருந்து தற்போது 55000 முதல் 60000 டன்கள் அளவிலான விமானந்தாங்கி கப்பல் போதும் என்றி நிலைபாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.