பிரம்மாஸ் ஏவுகணையில் ஆர்வம் காட்டும் மியான்மர் !!

  • Tamil Defense
  • August 4, 2022
  • Comments Off on பிரம்மாஸ் ஏவுகணையில் ஆர்வம் காட்டும் மியான்மர் !!

கடந்த 2ஆம் தேதி TASS ஊடகம் வெளியிட்ட செய்தியில் மியான்மர் இந்தியாவிடம் இருந்து பிரம்மாஸ் Brahmos க்ரூஸ் ஏவுகணைகளை வாங்க ஆர்வம் காட்டி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது இந்திய அரசிடம் இருந்து கடன் பெற்று அந்த பணத்தை கொண்டே இந்திய ரஷ்ய கூட்டு தயாரிப்பில் உருவான Brahmos ஏவுகணைகளை தனது கடற்படைக்கு வாங்க மியான்மர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே மியான்மர் கடற்படையிடம் ஐந்து வகையான கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளன அவற்றில் நான்கு சீன தயாரிப்பு ஒன்று ரஷ்ய தயாரிப்பு ஆகும்.C-801,C-802,C-802A,HY-2 ஆகியவை சீன ஏவுகணைகள் Kh-35U ரஷ்ய தயாரிப்பு ஆகும்.