வீரமரணம் அடைந்த ராணுவ நாய்க்கு உயரிய வீரதீர விருது !!

  • Tamil Defense
  • August 15, 2022
  • Comments Off on வீரமரணம் அடைந்த ராணுவ நாய்க்கு உயரிய வீரதீர விருது !!

கடந்த மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவடத்தில் நடைபெற்ற என்கவுன்டர் ஒன்றில் ராணுவ மோப்பநாய் Axel ஆக்ஸல் பயங்கரவாதிகளால் சுடப்பட்டு வீரமரணம் அடைந்தது.

இன்று நாடு முழுவதும் 76ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்திய தரைப்படை ஆக்ஸலுக்கு Mention In Dispatches எனும் விருது வழங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது, ஒட்டுமொத்தமாக 46 Mention In Dispatches விருதுகள் வழங்கப்பட உள்ளது என்பது கூடுதல் தகவல்.

மேற்குறிப்பிட்ட Mention In Dispatches என்பது தரைப்படை தலைமை தளபதியின் பாராட்டு அட்டை மற்றும் துணை தளபதியின் பாராட்டு அட்டைகளை விடவும் உயரிய விருதாகும், சமீப காலத்தில் இத்தகைய உயரிய விருதை பெறும் முதல் ராணுவ மோப்பநாய் ஆக்ஸல் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு வயதே ஆன ஆக்ஸல் ஜெர்மன் ஷெப்பர்ட் இனத்தை சேர்ந்த நாயாகும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் தான் இந்திய தரைப்படையின் 26ஆவது நாய் படையணியில் “26 Army Dog Unit” இணைந்தது இந்த ஆண்டு பணியில் வீரமரணம் அடைந்து விட்டது.