1 min read
போர்களை தடுக்க போப் பிரதமர் மோடி ஐநா பொது செயலர் உட்பட மூவர் ஆணையத்தை அமைக்க வேண்டும் மெக்ஸிகோ அதிபர் !!
சமீபத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து பேசிய மெக்ஸிகோ அதிபர் ஆன்ட்ரேஸ் மனுயேல் லோபேஸ் ஒப்ரேடார் உலகில் போர்களை தடுக்க ஒர் ஆணையத்தை அமைக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இந்த ஆணையத்தில் போப் ஃபிரான்சிஸ், ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது செயலாளர் ஆண்டானியோ குட்டரெஸ் மற்றும் இந்திய பிரதமர் மோடி ஆகியோர் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் எனவும்,
இந்த ஆணையத்தை அமைக்க ஐக்கிய நாடுகள் சபைக்கு தான் கடிதம் எழுத உள்ளதாகவும் மெக்ஸிகோ நாட்டின் அதிபர் ஆண்ட்ரேஸ் மனுயேல் லோபேஸ் ஒப்ரேடார் கூறியுள்ளார்.