தேஜாஸ் மார்க்-2, ஆம்கா, கடற்படை போர் விமானம் ஆகியவற்றிற்கு மார்ட்டின் பேக்கர் இருக்கைகள் !!
இந்தியாவின் ADA Aeronautical Development Agency எனப்படும் வானூர்தி மேம்பாட்டு முகமை தனது எதிர்கால போர் விமான திட்டங்களில் பிரிட்டிஷ் நிறுவனமான Martin Baker மார்ட்டின் பேக்கர் நிறுவனத்தின் இருக்கைகளை பயன்படுத்தி கொள்ள திட்டமிட்டு உள்ளது.
அதாவது 106 தேஜாஸ் மார்க்-2 (LCA TEJAS MK2), 120 ஆம்கா (AMCA) மற்றும் 45 TEDBF எனப்படும் இரட்டை என்ஜின் கடற்படை போர் விமானம் ஆகியவற்றை தயாரிக்கும் திட்டங்களில் Martin Baker நிறுவனத்தின் MK16 IN16 GS எனும் இருக்கைகளையே பயன்படுத்தி கொள்ள முடிவு செய்துள்ளது.
ஆனால் உலகளாவிய ரீதியில் உருவாக்கப்பட்டு வரும் எதிர்கால போர் விமானங்களுக்கு Martin Baker நிறுவனமானது தனது புதிய அதிநவீன அடுத்த தலைமுறை இருக்கைகளை ஆஃபர் செய்துள்ளது எனினும் ஏற்கனவே இந்திய விமானப்படை பயன்படுத்தி வரும் இருக்கைகளையே இனியும் பயன்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய விமானப்படை ஆர்டர் செய்துள்ள சுமார் 83 தேஜாஸ் போர் விமானங்கள் மற்றும் 106 சுதேசி பயிற்சி ஜெட் விமானங்களான HAL HTT-40 ஆகியவற்றிலும் மேற்குறிப்பிட்ட Martin Baker MK16 ரக இருக்கைகளை பயன்படுத்த உள்ளனர் என்பது கூடுதல் தகவல் ஆகும்.
இந்த விமானங்கள் படையில் இணையும் போது இந்திய கடற்படை மற்றும் இந்திய விமானப்படையில் 750 போர் விமானங்களில் சுமார் 1300க்கும் அதிகமான Martin Baker நிறுவனத்தின் இருக்கைகள் பயன்பாட்டில் இருக்கும் என்பதும் கடந்த 62 ஆண்டுகளில் சுமார் 230 இந்திய போர் விமானிகளின் உயிர்கள் இந்த இருக்கைகள் மூலமாக காப்பாற்றப்பட்டு உள்ளது கூடுதல் சிறப்பாகும்.