70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கும் அதிநவீன நேட்டோ பிரங்கி குண்டு !!

  • Tamil Defense
  • August 21, 2022
  • Comments Off on 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கும் அதிநவீன நேட்டோ பிரங்கி குண்டு !!

அமெரிக்காவின் போயிங் BOEING மற்றும் நார்வே நாட்டின் Nammo நேம்மோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து Ramjet Engine கொண்ட புதிய அதிநவீன பிரங்கி குண்டு ஒன்றை சோதனை செய்துள்ளன.

இது அமெரிக்க ராணுவத்தின் நவீனப்படுத்தல் திட்டத்தின் ஒரு பகுதியாகும், இதற்கென உருவாக்கப்பட்ட நடமாடும் பிரங்கியான M109A8 தவிர்த்து M109A7 PALADIN மற்றும் M777 ரக பிரங்கிகளும் இந்த குண்டை பயன்படுத்தி கொள்ள முடியும் என கூறப்படுகிறது.

2015ஆம் ஆண்டு அமெரிக்க தரைப்படை நிதியளிக்க இந்த திட்டம் துவங்கப்பட்டது தற்போது அதாவது இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இறுதியில் இந்த பிரங்கி குண்டின் சோதனை நார்வே நாட்டில் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.

சுமார் 70 கிலோமீட்டர் தொலைவு வரை பாய்ந்து சென்று இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் இந்த குண்டால் நகரும் டாங்கி, நடமாடும் பிரங்கி ஆகியவற்றை கூட தாக்கி அழிக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பாகும்.

இந்த அதிநவீன Ramjet என்ஜின் பொருத்தப்பட்ட பிரங்கி குண்டானது எதிர்காலத்தில் நேட்டோ கூட்டமைப்பின் பிரதான பிரங்கி குண்டாக உபயோகப்படுத்தப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்றால் மிகையல்ல.