ஆசியாவின் முதல் லித்தியம் பேட்டரி கொண்ட விமானம் இந்தியாவின் HTT-40 !!

  • Tamil Defense
  • August 6, 2022
  • Comments Off on ஆசியாவின் முதல் லித்தியம் பேட்டரி கொண்ட விமானம் இந்தியாவின் HTT-40 !!

ஆசிய கண்டத்திலேயே முதல்முறையாக லித்தியம் ஐயான் பேட்டரிகளை கொண்டு இயங்கும் முதல் விமானம் என்ற பெருமையை நமது நாட்டின் HTT-40 ரக விமானம் பெற்றுள்ளது.

அதாவது எரிபொருள் இன்றி லித்தியம் ஐயான் Lithium Ion பேட்டரியின் சக்தி கொண்டு மட்டுமே இயங்கும் ஆற்றலை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விமானத்தை தயாரித்த HAL ஹிந்துஸ்தான் ஏரோநாடிகஸ் லிமிடெட் நிறுவனமானது இந்த புதிய தொழில்நுட்பம் பற்றிய விவரங்களை ரகசியமாக வைத்துள்ளது.

அதிகபட்சமாக 400 கிலோமீட்டர் வேகம், 6 கிலோமீட்டர் உயரம்,1000 கிலோமீட்டர் இயக்கவரம்பு, 1100 குதிரைசக்தி திறன் கொண்ட என்ஜின் போன்றவை இந்த பயிற்சி விமானத்தின் சிறப்புகள் ஆகும்.