ஏமன் நாட்டின தலைநகர் சனாவின் புறநகர் பகுதியில் உள்ள ராணுவ முகாம் ஒன்றில் அடுத்தடுத்து இரண்டு வெடிப்புகள் ஏற்பட்டன இதில் ஈரான் மற்றும் லெபனானை சேர்ந்த விஞ்ஞானிகள் மரணமடைந்தனர்.
ஆறு ஈரான் மற்றும் லெபனானிய விஞ்ஞானிகள் இப்படி மரணமடைந்த நிலையில் அவர்களுடன் பல ஹூத்தி கிளர்ச்சியாளர்களும் மரணமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள அல்-ஹஃபா படைத்தளத்தில் பலிஸ்டிக் ஏவுகணைகளை தயார்ப்படுத்தும் போது நிகழ்ந்துள்ளது.
ஈரான் மற்றும் அதன் ஆதரவு அமைப்பான லெபனானை சேர்ந்த ஹெல்புல்லாஹ் அமைப்பு ஆகியவற்றின் உதவியுடன் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் ஏமன் அரசை எதிர்த்து போராடி வருவதும்
ஏமன் நாட்டில் நடைபெறும் சண்டை ஈரான் தலைமையிலான அணிக்கும், சவுதி அரேபியா தலைமையிலான இதர வளைகுடா நாடுகளுக்கும் இடையில் நடக்கும் நிழல் யுத்தம் என்பது குறிப்பிடத்தக்கது.