காஷ்மீரில் வீட்டில் தேசிய கொடி ஏற்றிய லஷ்கர் பயங்கரவாதியின் குடும்பம் !!
1 min read

காஷ்மீரில் வீட்டில் தேசிய கொடி ஏற்றிய லஷ்கர் பயங்கரவாதியின் குடும்பம் !!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் உள்ள பாரத் பக்லா எனும் கிராமத்தில் குபைர் எனும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதியின் குடும்பத்தினர் வீட்டில் தேசிய கொடி ஏற்றி உள்ளனர்.

இதுபற்றி பயங்கரவாதி குபைரின் சகோதரர்கள் ஷமாஸ் தின் சவுதிரி மற்றும் நஸாப் தின் சவுதிரி ஆகியோர் பேசும்போது தாங்கள் இந்தியர்கள் என்பதில் பெருமிதம் கொள்வதாக தெரிவித்தனர்.

மேலும் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் பேசும்போது எங்களது வீட்டில் தேசிய கொடி ஏற்ற இப்படி ஒரு மகத்தான வாய்ப்பு கிட்டியுள்ளது அதற்கு பிரதமருக்கு நன்றி சொல்கிறோம் என்றனர், பிரதமர் அனைத்து வீடுகளிலும் கொடி ஏற்ற கேட்டு கொண்டது குறிப்பிடத்தக்கது.