இந்திய கடலோர காவல்படையில் அதிகாரி பணியிடங்கள் !!

  • Tamil Defense
  • August 16, 2022
  • Comments Off on இந்திய கடலோர காவல்படையில் அதிகாரி பணியிடங்கள் !!

இந்திய கடலோர காவல்படை Indian Coast Guard 71 காலி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிக்கையை வெளியிட்டு உள்ளது.

Assistant Commandant GD/Navigator/Women SSA/Engineering – (Electrical & Electronics) /Commercial Pilot License மற்றும் Law ஆகிய மேற்குறிப்பிட்ட பிரிவுகளில் 71 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வருகிற 17ஆம் தேதி முதல் விண்ணபிக்க துவங்கலாம் விண்ணபிக்க இறுதி நாள் செப்டம்பர் 9ஆம் தேதியாகும், 12ஆம் வகுப்பில் இயற்பியல் மற்றும் கணிதம் (Phy&Maths) உடனும் உயர்கல்வியில் 50% உடனும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

முதல்கட்டமாக CGCAT தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும், பின்னர் PSB மற்றும் FSB ஆகியவற்றில் தேர்ச்சி பெற வேண்டும் அதனை தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ சோதனை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை பற்றிய மேலதிக தகவல்களுக்கு joinindiancoastguard.gov.in எனும் இந்திய கடலோர காவல்படையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும்.