DRDO பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு !!
DRDO Defence Research & Development Organisation அதாவது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ஒரு பிரிவு தான் DIBER Defence Institute of Bio Energy Research அதாவது பாதுகாப்பு உயிரி சக்தி ஆய்வு நிறுவனம். இது உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் அமைந்துள்ளது.
இங்கு Trade Apprentice பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த ITI பயின்றோர் நியமிக்கப்பட உள்ளனர், இதற்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது, விரைவில் விண்ணபிக்கும் கடைசி நாள் நெருங்கி விடும்.
தகுதி வாய்ந்த ITI பயின்ற மாணவர்கள் மத்திய திறன் வளர்ப்பு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் இணையதளத்தில் சென்று தாங்கள் பயின்ற TRADE ஐ தேர்வு செய்து விண்ணபிக்கலாம். இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரிகள் முன்னர் ITI பயின்றிருந்தால் அவர்கள் இதற்கு தகுதி வாய்ந்தவர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தராகண்ட் மாநிலம் ஹல்த்வானி அருகேயுள்ள பித்தோராகர் பகுதியில் அமைந்துள்ள DIBER நிலையத்தில் தான் பணி, தேர்வு செய்யப்படுவோர் மாதம் 6000 ரூபாய் சம்பளத்தில் ஒரு வருடம் பணியில் அமர்த்தப்படுவர்.
கீழே எந்தெந்த Trade Apprentice பணிகள் காலியாக உள்ளன என்ற விவரங்கள் இணைக்கப்பட்டுள்ளன,
Trade Apprentice and Course Code Name
1) Trade Apprentice Mechanic (Non-Conventional Power Generation, Battery and Invertor) Code: CO031900261
2) Trade Apprentice Mechanic Power Electronics (Inverters, UPS and Maintenance of Drives): Code CO031900245 (for DRDO, Haldwani)
3) Trade Apprentice Mechanic Repair and Maintenance of Electronics Test Equipment: Code CO031900141 (for DRDO, Haldwani)
4) Trade Apprentice Mechanic (Tractor): Code CO031900190 (for DRDO, Haldwani)
5) Trade Apprentice Electronics Mechanic: Code: CO032019000011(for DRDO, Haldwani)
6) Trade Apprentice Laboratory Assistant (Chemical Plant): Code CO032019000023 (for DIBER Field Station, Pithoragarh)
7) Trade Apprentice Horticulture Assistant: Code: CO031900075 (for DIBER Field Station, Pithoragarh)
8) Trade Apprentice Florist and Landscaper: Code CO031900233 (for DIBER Field Station, Pithoragarh)
9) Trade Apprentice Information and Communication Technology System Maintenance: Code CO031900243 (for DRDO, Haldwani)
0) Trade Apprentice Computer Operator and Programming Assistant (COPA): Code: CO032019000009 (for DRDO, Haldwani)
11) Trade Apprentice Electrician: Code CO032019000010 (for DRDO, Haldwani)
12) Trade Apprentice Fitter: Code CO032019000012 (for DRDO, Haldwani)
13) Trade Apprentice Advance Welder: Code: CO031900106 (for DRDO, Haldwani)
14) Trade Apprentice Draughtsman (Mechanical): Code CO031900042 (for DRDO, Haldwani)
15) Trade Apprentice Painter (General): Code CO031900144 (for DRDO, Haldwani)
விண்ணப்பிக்கும் முறை;
1) விண்ணபிக்க திறன் வளர்ப்பு மற்றும் தொழில் முனைவோர் துறை அமைச்சகத்தின் Ministry of Skill Development & Entrepreneurship (MSDE) இணையதள முகவரிக்கு செல்ல வேண்டும்
www.apprenticeshipindia.gov.in
2) அங்கு www.apprenticeshipindia.gov.in→Career→Online Recruitment→Apprentice என வரிசையாக தேர்வு செய்ய வேண்டும்
3) அங்கு Apprentice Section ஐ தேர்வு செய்து அதில் Create New Account ஐ தெரிவு செய்து புதிய கணக்கை துவங்கி கணக்கிற்குள் சென்று Register செய்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.
4) விண்ணபிக்கும் அனைவரும் கண்டிப்பாக www.apprenticeshipindia.gov.in. இணையதளத்தில் தங்களது பெயர்களை பதிவு செய்திருக்க வேண்டும்.