ஜப்பான் இரண்டாம் உலகப்போரில் தோல்வியை தழுவிய பிறகு போரை விரும்பாத அமைதியை அதிகமாக விரும்பும் தற்காப்பு ஆயுதங்களை பிரதானமாக பயன்படுத்தும் நாடாகவே இருந்து வருகிறது இதற்கு அந்நாட்டின் அரசியல் அமைப்பு சட்டம் தான் காரணம்.
இந்த நிலையில் சீனாவின் அடாவடித்தனம் காரணமாக ஜப்பான் படிப்படியாக தனது அமைதி விரும்பும் அரசியல் நிலைபாட்டில் இருந்து விலகி வருகிறது அந்த வகையில் தற்போது மிகவும் அதிநவீன தாக்குதல் ஆயுதங்களை படையில் இணைத்து வருகிறது.
அந்த வகையில் தற்போது ஜப்பான் சுமார் 1000 அதிநவீன தொலைதூர ஏவுகணைகளை படையில் சேர்த்து சீனாவுக்கு எதிராக களமிறக்க திட்டம் வகுத்துள்ளதாக ஜப்பானை சேர்ந்த நாளிதழான யோமியூரி செய்தி வெளியிட்டு உள்ளது.
ஏற்கனவே ஜப்பானிடம் உள்ள 100 கிலோமீட்டர் மட்டுமே பாயக்கூடிய ஏவுகணைகளை 1000 கிலோமீட்டர் தொலைவ செல்லக்கூடியவையாக மேம்படுத்த உள்ளனர், இவை சீனா மற்றும் வடகொரியா ஆகிய நாடுகளின் பல முக்கிய நகரங்களை தாக்கும் திறன் கொண்டவையாக இருக்கும்.
இந்த தொலைதூர க்ரூஸ் ஏவுகணைகளை ஜப்பான் தனது நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள தெற்கு நான்செய் தீவு பகுதியில் பிரதானமாக நிலைநிறுத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.