உத்தர பிரதேசத்தில் ஜெய்ஷ் இ மொஹம்மது பயங்கரவாதி கைது !!
நேற்று காலை உத்தர பிரதேச மாநில காவல்துறை அதிகாரிகள் கான்பூரை சேர்ந்த சயிஃப்பூல்லா எனும் பயங்கரவாதியை கைது செய்துள்ளனர்.
ஏற்கனவே உத்தர பிரதேச காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு கைது செய்த சஹாரன்பூரை சேர்ந்த மொஹம்மது நதீம் அளித்த தகவலின் பேரில் சயீஃப்பூல்லா கைது செய்யப்பட்டு உள்ளான்.
இந்த சயீஃப்பூல்லாவுக்கு பாகிஸ்தானில் இருந்து இயங்கும் ஜெய்ஷ் இ மொஹம்மது அமைப்புடன் தொடர்பு உள்ளது, மேலும் இவனக்கு ஹபீப் அல் இஸ்லாம் என மற்றொரு பெயர் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இவன் Virtual ID விர்ச்சுவல் அடையாள அட்டைகளை உருவாக்குவதில் கைதேர்ந்தவன், இப்படி பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தானை சேர்ந்த 50 பயங்கரவாதிகளுக்கு விர்ச்சுவல் அடையாள அட்டைகளை உருவாக்கி முகநூல் வாட்சாப்டெலிகிராம் வழியாக அனுப்பி கொடுத்துள்ளான்.
இது தவிர சயீஃப்பூல்லா ஜிஹாத் தொடர்பான குரல் பதிவுகளை மேற்குறிப்பிட்ட சமுக வலைதளங்களில் பகிர்ந்து வந்துள்ளான் தற்போது சயீஃப்பூல்லாவை பல வெவ்வேறு அமைப்புகள் விசாரிக்க துவங்கி உள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.