வெற்றிகரமாக ஏவப்பட்ட ராக்கெட் ஆனாலும் தோல்வியடைந்த இஸ்ரோவின் நடவடிக்கை !!

  • Tamil Defense
  • August 9, 2022
  • Comments Off on வெற்றிகரமாக ஏவப்பட்ட ராக்கெட் ஆனாலும் தோல்வியடைந்த இஸ்ரோவின் நடவடிக்கை !!

ஞாயிற்றுக்கிழமை அன்று காலை இஸ்ரோ புதிய SSLV ரக ராக்கெட்டை ஆந்திர மாநிலம் ஶ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

இந்த ராக்கெட் சுமார் 75 செயற்கைகோள்களை சுமந்து சென்ற நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயற்கைகோள்களை சரியான சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்த முடியவில்லை.

34 மீட்டர் உயரமுள்ள ராக்கெட்டின் 3 நிலைகள் சரியாக செயல்பட்ட நிலையில் 4ஆவது நிலை VTM என்ற அமைப்பில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பூமியில் இருந்து சுமார் 356 கிலோமீட்டர் உயரத்தில் நிலைநிறுத்த வேண்டிய செயற்கைகோள்களை வெறும் 76 கிலோமீட்டர் உயரத்தில் ராக்கெட் நிலைநிறுத்தி உள்ளது.

இதன் காரணமாக இனி அந்த செயற்கைகோள்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, இந்த துரதிர்ஷ்டவசமான நிகழ்வு குறித்து விசாரணை நடத்தப்படும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.