சக வீரராலேயே கொல்லப்பட்ட இஸ்ரேலிய வீரர் !!

இஸ்ரேலின் மேற்கு கரை பகுதியில் உள்ள துல்கார்ம் எனும் நகரத்தில் நடைபெற்ற சம்பவம் ஒன்றில் ஒரு இஸ்ரேலிய தரைப்படை வீரர் தனது சக வீரராலேயே கொல்லப்பட்டார்.

திங்கட்கிழமை அன்று Staff Sgt நாதன் ஃபிதுஸ்ஸி தனது பாதுகாப்பு நிலையை விட்டு வெளியே சென்று விட்டு பின்னர் திரும்பி வந்தார்.

அப்போது அவரது சக வீரர் அடையாளம் தெரியாமல் அத்தகைய நபர்களை என்ன வழிமுறையில் கையாள வேண்டுமோ அப்படி கையாண்டுள்ளார் அந்த வகையில் நாதனை சுட்டு கொன்றுள்ளார்.

இதனை தொடர்ந்து இஸ்ரேலிய பாதுகாப்பு படைகளின் தளபதி சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.