காசாவில் இஸ்ரேல் தாக்குதல் முக்கிய பயங்கரவாத தலைவர் மரணம் !!

  • Tamil Defense
  • August 7, 2022
  • Comments Off on காசாவில் இஸ்ரேல் தாக்குதல் முக்கிய பயங்கரவாத தலைவர் மரணம் !!

சமீபத்தில் மேற்கு கரை பகுதியில் செயல்பட்டு வந்த மூத்த பயங்கரவாத தலைவர்களில் ஒருவரான பஸ்ஸேம் சாதியை இஸ்ரேல் கைது செய்தது.

இதனை தொடர்ந்து காசாவில் இருந்து இயங்கி வரும் ஹமாஸ் பயங்கரவாத குழு தொடர் எச்சரிக்கைகளை விடுத்தால் பதட்டம் நிலவி வந்தது.

இந்த நிலையில் இஸ்ரேலிய ராணுவம் முன்னெச்சரிக்கை அடிப்படையில் காசா பகுதியில் விமானப்படையை அனுப்பி பலத்த தாக்குதல் நடத்தியது.

ஆறு இடங்களை குறிவைத்து இஸ்ரேலிய விமானப்படை அதிரடியாக நடத்திய தாக்குதலில் தெய்சீர் ஜபாரி என்ற மூத்த பயங்கரவாத தலைவன் கொல்லப்பட்டான்.

இவன் பயங்கரவாத அமைப்பின் வடக்கு காசா படைகள் மற்றும் டாங்கி எதிர்ப்பு ஏவுகணை தாக்குதல் பிரிவிற்கும் தலைவன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி இஸ்ரேலிய ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் லெஃப்டினன்ட் கர்னல் ரிச்சர்ட் ஹெக்ட் பேசிய போது டாங்கி எதிர்ப்பு குழுக்களின் நடமாட்டம் அதிகரித்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

காசாவில் ஹமாஸ் குழுவின் கட்டுபாட்டில் இயங்கும் சுகாதார துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் ஐந்து வயது குழந்தை உட்பட ஐவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.