இந்திய அரசியல்வாதி மீது தாக்குதல் நடத்த திட்டம் ரஷ்யாவில் தற்கொலை படை பயங்கரவாதி கைது !!

இந்திய ஆளும்கட்சியை சேர்ந்த முக்கியமான அரசியல்வாதி ஒருவரை கொல்ல திட்டமிட்டு இருந்த ISIS தற்கொலை படை பயங்கரவாதி ரஷ்யாவில் கைது செய்யப்பட்டு உள்ளான்.

மத்திய ஆசிய நாடு ஒன்றை சேர்ந்த அந்த பயங்கரவாதி துருக்கியில் ISIS இயக்கத்தில் இணைந்து உள்ளான், இவன் இந்திய அரசியல் தலைவரை கொல்ல தயாராகி வந்துள்ளான்.

இவனை ரஷ்யாவின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் உளவு கண்காணிப்பு அமைப்பான FSB FEDERAL SECURITY SERVICE ஃபெடரல் பாதுகாப்பு சேவை பிரிவு கையும் களவுமாக கைது செய்து இந்திய அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளது.