இந்திய விமானப்படை நீண்ட கால காத்திருப்புக்கு பின்னர் பிரதமர் அலுவலகத்தின் உதவியோடு தொலைதூர குண்டுவீச்சு போர் விமானங்களை வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தில்லியில் சாணக்யா ஃபவுன்டேஷன் அமைப்பின் சாணக்யா கருத்தரங்கில் கலந்து கொண்ட இந்திய விமானப்படையின் முன்னாள் தலைமை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் அருப் ராஹா இந்த தகவல்களை அங்கு பேசும்போது தெரிவித்தார், மேலும் ரஷ்ய தயாரிப்பு Tupolev-160 ஆக இது இருக்கலாம் என்றார்.
75 ஆண்டு காலமாக இந்திய விமானப்படை இத்தகைய தொலைதூர குண்டுவீச்சு போர் விமானங்களை வாங்காமல் பாகிஸ்தானை பற்றி மட்டுமே சிந்தித்து கொண்டிருந்தது தற்போது அந்த நிலை மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய விமானப்படை கடந்த 70க்கும் அதிகமான ஆண்டுகளில் இந்திய விமானப்படை தொலைதூர குண்டுவீச்சு போர் விமானங்களை வாங்காமல் தவிர்த்து வந்தது உலகின் நான்காவது பெரிய விமானப்படையாக இருந்தாலும் சூப்பர்சானிக் தொலைதூர குண்டுவீச்சு விமானம் மட்டும் இல்லை.
கடந்த 1971 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியம் இந்திய விமானப்படைக்கு Tupolev-22 ரக தொலைதூர குண்டுவீச்சு விமானத்தை விற்க முன்வந்தது ஆனால் இந்திய விமானப்படை பல்வேறு காரணங்களை கூறி தவிர்த்தது, அன்று அதனை வாங்கியிருந்தால் அதன் அதிநவீன வடிவமான Tupolev-22M3 விமானத்தை ரஷ்யா வழங்கியிருக்கும்.
Tupolev-160 ரக சூப்பர்சானிக் தொலைதூர குண்டுவீச்சு விமானம் ஆயுதங்கள் இன்றி சுமார் 12,300 கிலோமீட்டர் தொலைவு வரை பயணிக்கும் முழு ஆயுத கொள்ளளவு உடன் 7,300 கிலோமீட்டர் தொலைவு பறக்கக்கூடியது, மேலும் இது மணிக்கு சுமார் 2,200 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.