சுதந்திர தினத்தன்று தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டம் எச்சரித்த உளவுத்துறை !!
நாளை சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில் நாடெங்கும் பாதுகாப்பை அதிகரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது காரணம் பாகிஸ்தான் இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நிகழத்த திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
பாகிஸ்தான் உடைய உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுடன் கூட்டு சேர்ந்துள்ளது தற்போது அந்த அமைப்புகளை இந்தியாவில் குறிப்பாக பஞ்சாப் மற்றும் அதை சுற்றியுள்ள மாநிலங்களில் தாக்குதல்களை நடத்துமாறு ஐ.எஸ்.ஐ அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளுடனும் காஷ்மீரிய பயங்கரவாத அமைப்புகளுடனும் கூட்டணி சேர்ந்துள்ளதாகவும் இதற்கு ஐ.எஸ்.ஐ உதவியதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து நாடு முழுவதும் அனைத்து மாநில காவல்துறைகள் குறிப்பாக தில்லி காவல்துறை, இந்திய தரைப்படை மற்றும் துணை ராணுவ படைகள் உச்சகட்ட உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.