News18 ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியின்படி அடுத்த ஆண்டு வெளி உலகிற்கு அறிமுகம் செய்யப்பட உள்ள இலகுரக டாங்கிக்கு ZORAWAR ஸோராவர் என பெயர் சூட்டப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் Defence Research & Development Organisation DRDO மற்றும் இந்திய தனியார் துறை நிறுவனமான L & T Larsen and Toubro எனப்படும் லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன.
அதாவது இந்திய தரைப்படை மலை பிரதேசத்தில் பயன்படுத்தி கொள்ளும் வகையிலான இலகுரக டாங்கிகளின் தேவையை உணர்ந்து அவற்றை தயாரிக்க கோரிக்கை விடுத்த போது DRDO வடிவமைப்பு மற்றும் L & T தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள முடிவு செய்து கூட்டாக களமிறங்கின.
இந்திய தரைப்படை தலா 25 டன்கள் எடை கொண்ட சுமார் 350 இலகுரக டாங்கிகளை படையில் இணைக்க விரும்புகிறது, இவற்றை விரைவாக இந்தியாவின் தீவுகள், மலை பிரதேச பகுதிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் விரைவாக கொண்டு சென்று பயன்படுத்தி கொள்ள முடியும் என்பது இதன் சிறப்பாகும்.