இந்தியா மிக முக்கியமான கூட்டாளி சீனாவை எதிர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் அமெரிக்க கடற்படை தளபதி !!

  • Tamil Defense
  • August 28, 2022
  • Comments Off on இந்தியா மிக முக்கியமான கூட்டாளி சீனாவை எதிர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் அமெரிக்க கடற்படை தளபதி !!

சமீபத்தில் அமெரிக்க கடற்படையின் நடவடிக்கைகள் பிரிவுக்கு தலைவரான அட்மிரல் மைக் கில்டே அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள Heritage Foundation எனும் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் இந்தியா அமெரிக்காவின் மிக முக்கியமான கூட்டாளி எனவும் சீனாவை எதிர்ப்பதில் இந்தியா மிக பெரிய பங்களிப்பை ஆற்றும் எனவும் தனது வெளிநாட்டு பயணத்தில் அதிக நேரம் இந்தியாவில் கழித்துள்ளதாகவும் இந்தியாவை அவ்வளவு முக்கியமாக கருதுவதாகவும் அவர் கூறினார்.

அட்மிரல் மைக் கில்டே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஐந்து நாள் இந்தியாவுக்கு சுற்றுபயணமாக வந்தார் மேலும் இந்தியா ஜப்பான் அமெரிக்கா ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கடற்படைகள்.கலந்து கொள்ளும் மலபார் போர் பயிற்சிகளின் போதும் இந்தியா வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.