சீனாவால் இந்தியாவும் வியட்நாமும் அதிகம் தொந்தரவுக்கு உள்ளாகுவது அறிந்ததே அந்த வகையிலும் அதை தவிர்த்து இதர பல காரணங்களாலும் இந்தியா மற்றும் வியட்நாம் இடையே நல்ல நட்புறவு நீடித்து வருகிறது மேலும் இருநாட்டு ராணுவ உறவுகளும் அதிகமாக நெருக்கம் அடைந்து வருகிறது.
இந்த நிலையில் வியட்நாம் ராணுவத்தின் வரலாற்றில் முதல் முறையாக தற்போது வெளிநாட்டு கள பயிற்சி நடைபெறுகிறது இதனை இந்திய ராணுவம் இந்தியாவில் நடத்தி வியட்நாம் ராணுவத்திற்கு கள பயிற்சி அளிக்கிறது.
ஹரியானா மாநிலம் சண்டிமந்திர் பகுதியில் VINBAX என பெயரிடப்பட்டுள்ள இந்த மூன்று நாள் பயிற்சி துவங்கி நடைபெற்று வருகிறது, இதில் பொறியியல் மருத்துவம் மற்றும் வெளிநாடுகளில் பணியாற்றுவது எப்படி போன்ற கள பயிற்சிகளை ஐக்கிய நாடுகள் அமைதிபடை நடைமுறைகளின் படி இந்திய ராணுவம் அளிக்க உள்ளது.
வியட்நாம் ராணுவம் முதல்முறையாக தெற்கு சூடான் நாட்டிற்கு தனது படைகளை ஐக்கிய நாடுகள் அமைதிப்படை பணிகளை மேற்கொள்ள அனுப்பி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த ஜூன் மாதம் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வியட்நாம் சென்ற போது இந்தியாவில் கட்டப்பட்ட சுமார் 100 மில்லியன் டாலர் மதிப்பிலான 12 அதிவேக ரோந்து படகுகளை வியட்நாம் கடற்படையிடம் ஒப்படைத்தார்.
இப்படி இந்தியா வியட்நாம் இருதரப்பு ராணுவ உறவுகள் ஏற்கனவே வலுவாக உள்ள நிலையில் இரண்டு நாடுகளும் சேர்ந்து 2030ஆம் ஆண்டுக்குள் இரு நாட்டு ராணுவ உறவுகளை புதிய உயரத்திற்கு எடுத்து செல்ல திட்டவரைவு ஒன்றை வெளியிட்டுள்ளது கூடுதல் சிறப்பு ஆகும்.