இஸ்ரேலிய் I-Derby அதிநவீன ஏவுகணைகளை பெறும் இந்திய சுகோய் விமானங்கள் !!
இந்திய விமானப்படையின் முன்னனி போர் விமானம் Sukhoi-30 MKI சுகோய்-30 எம்.கே.ஐ ஆகும், தற்போது இவற்றின் போர் திறனை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் அதிநவீன இஸ்ரேலிய தயாரிப்பில் உருவான பார்வைக்கு அப்பால் உள்ள வான் இலக்குகளை தாக்கும் ஏவுகணையான I-Derby BVR , Sukhoi-30 MKI விமானங்களில் இணைக்கப்பட உள்ளது.
100 முதல் 140 கிலோமீட்டர் தொலைவு வரை பாயக்கூடிய இந்த ஏவுகணைகள் Active Radar Seeker அதாவது ரேடார் தேடுதல் கருவியை கொண்டவை ஆகும், மேலும் இவற்றில் மின்னனு போர் முறை கருவிகளும் உள்ளன.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட Astra Mk1 BVRAAM ஏவுகணைகள் வெற்றிகரமாக இணைக்கப்பட்ட நிலையில் தற்போது I-DERBY BVRAAM ஏவுகணைகளை இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன இவை இரண்டுமே SDR Software Defined Radio தொழில்நுட்பத்தை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
இவை தவிர இந்திய விமானப்படை 160 கிலோமீட்டர் பாயக்கூடிய Astra Mk2 மற்றும் 340 கிலோமீட்டர் பாயக்கூடிய Astra Mk3 போன்ற BVRAAM ஏவுகணைகளையும் 2025ஆம் ஆண்டு வாக்கில் படையில் இணைக்க விரும்புகிறது என்பது கூடுதல் தகவல் ஆகும்.