MQ-9 Predator ட்ரோன்களை அடுத்து MQ-4C Triton ரக ட்ரோன்களில் ஆர்வம் காட்டும் இந்திய கடற்படை !!

Financial Express ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியின்படி இந்திய கடற்படை அமெரிக்காவின் Northrop Grumman Systems Corp நிறுவனத்துடன் MQ-4C Triton ரக ஆளில்லா விமானங்களை வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு MQ-4C TRITON ரக ஆளில்லா விமானத்தின் மதிப்பும் சுமார் 120 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் ஏற்கனவே இந்திய கடற்படை 10 MQ-9 Sea Guardian ரக ஆளில்லா விமானங்களை தலா 100 மில்லியன் டாலர் மதிப்பில் வாங்க ஒப்பந்தம் செய்து உள்ளது.

P8 I தொலைதூர கடல்சார் கண்காணிப்பு விமானங்கள், MQ-9 Sea Guardian ரக ஆளில்லா விமானங்கள் மற்றும் MQ-4C Triton ரக ஆளில்லா விமானங்கள் ஆகியவை மூன்றும் கடல்பரப்பை கண்காணிக்க சரியான கூட்டணியாகும் இவற்றை பயன்படுத்தி உளவு கண்காணிப்பு ஆகியவற்றை ஒட்டுமொத்த இந்திய பெருங்கடல் பகுதியில் மேற்கொள்ள முடியும் என்பது கூடுதல் தகவல் ஆகும்.

தற்போது இந்திய கடற்படை 12 Boeing P8 I தொலைதூர கடல்சார் கண்காணிப்பு விமானங்கள் மற்றும் குத்தகைக்கு எடுக்கப்பட்ட இரண்டு MQ-9 Sea Guardian ரக ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.