SKYLIGHT ; இந்திய தரைப்படையின் விண்வெளி சார் பயிற்சி !!
இந்திய தரைப்படை முதன் முதலாக விண்வெளி சார்ந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மிகப்பெரிய அளவில் பயிற்சி ஒன்றை மேற்கொண்டு உள்ளது.
அகில இந்திய அளவில் (அந்தமான் நிகோபார் உட்பட) நடைபெற்ற இப்பயிற்சியில் இந்திய தரைப்படையின் அனைத்து செயற்கைகோள் தொடர்பு சாதனங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.
கடந்த ஜூலை மாதம் 25 முதல் 29 வரையிலான நாட்களில் நடைபெற்ற இந்த பயிற்சிக்கு SKYLIGHT என பெயரிடப்பட்டது, இந்த பயிற்சியில் செயற்கைகோள் சாரந்த தொழில்நுட்ப திறன்கள் மற்றும் அவற்றை இயக்கும் வீரர்களின் திறன்கள் பரிசோதனை செய்யப்பட்டன.
சுமார் 280க்கும் அதிகமான தொழில்நுட்பங்கள் பயிற்சியில் பயன்படுத்தப்பட்ட நிலையில், இந்திய தரைப்படையுடன் DRDO, ISRO உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் கலந்து கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.