ஆளில்லா விமானங்களில் ஆர்வம் காட்டும் முப்படைகள் !!

  • Tamil Defense
  • August 8, 2022
  • Comments Off on ஆளில்லா விமானங்களில் ஆர்வம் காட்டும் முப்படைகள் !!

இந்தியாவின் முப்படைகளும் அடுத்த சில ஆண்டுகளில் கணிசமான அளவில் ஆளில்லா விமானங்களை படையில் இணைக்க விரும்புகின்றன, குறிப்பாக சீன எல்லையோரம் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதி ஆகிய பகுதிகளில் பயன்படுத்தப்பட உள்ளன.

இதற்காக ஒவ்வொரு படையும் தரைப்படை விமானப்படை கடற்படை ஆகியவை தனித்தனியாக திட்டங்களை இந்த நவீன தளவாடங்களை படையில் இணைக்க திட்டங்களை வகுத்துள்ளன, குறிப்பாக ஆயுதம் தாங்கிய ஆளில்லா விமானங்களை மீது படைகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.

மேலும் அமெரிக்காவிடம் இருந்து இந்தியா முப்பது பல உபயோக திறன் கொண்ட MQ-9 PREDATOR ரக ஆளில்லா விமானங்களை சுமார் 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் வாங்க உள்ளதும்,

2020ஆம் ஆண்டு இந்திய கடற்படை அமெரிக்காவிடம் இருந்து இரண்டு ஆயுதமில்லா MQ-9 PREDATOR ரக ஆளில்லா விமானங்களை குத்தகை அடிப்படையில் பெற்று கொண்டது குறிப்பிடத்தக்கது.