உலகிலேயே முதல்முறையாக கடல்நீரில் இருந்து யூரேனியம் எடுக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கிய இந்தியா !!

  • Tamil Defense
  • August 13, 2022
  • Comments Off on உலகிலேயே முதல்முறையாக கடல்நீரில் இருந்து யூரேனியம் எடுக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கிய இந்தியா !!

உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டு வரும் மாற்றத்தை தடுக்க அல்லது அதன் தாக்கத்தை குறைக்க அணுசக்தி சார்ந்த மின்சார தயாரிப்பில் பல உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.

ஆனால் இதற்கு தேவையான யூரேனியத்தை Uranium-235 பூமியில் இருந்து தோண்டி எடுக்க வேண்டும் தற்போது பூமியில் 7.5 மில்லியன் மெட்ரிக் டன்கள் யூரேனியம் உள்ளது ஆனால் இது தீர்ந்து விட்டால் அதன் பிறகு அணுசக்தி சார்ந்த மின்சார தயாரிப்பு பெருமளவில் தடைபடும்.

தற்போது இந்திய விஞ்ஞானிகள் இதற்கான தீர்வை கண்டுபிடித்து உள்ளனர் அதாவது கடல்நீரில் உள்ள யூரேனியத்தை பிரித்து எடுத்து அதனை கொண்டு மின்சாரத்தை தயாரிக்க முடியும்.

பூனே நகரில் உள்ள IISER – Indian Institute of Science Education & Research இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆய்வு கல்லூரியை சேர்ந்த விஞ்ஞானிகள் மிகச்சிறிய நுண்துளைகளை கொண்ட Metal Organic Framework MOF என்ற அமைப்பை உருவாக்கி உள்ளனர்.

இதனை கொண்டு சுமார் 96.3 சதவிகிதம் அளவு வரையிலான யூரேனியத்தை பிரித்து எடுத்தள்ளனர், இதற்காக மும்பை ஹூஹூ கடல்பகுதியில் இருந்து கடல்நீரை எடுத்த பயன்படுத்தி உள்ளனர், கடல்நீரில் 4.5 பில்லியன் டன்கள் யூரேனியம் உள்ளது அதாவது நிலத்தில் கிடைப்பதை விடவும் சுமார் 1000 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகில் இத்தகைய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ள முதல் நாடு எனும் பெருமையை இந்தியா இந்த ஆய்வின் மூலமாக பெற்றுள்ளது என்றால் மிகையல்ல.