இந்திய கப்பல் மாலுமிகளை மீட்ட பாகிஸ்தான் கடற்படை !!

  • Tamil Defense
  • August 12, 2022
  • Comments Off on இந்திய கப்பல் மாலுமிகளை மீட்ட பாகிஸ்தான் கடற்படை !!

புதன்கிழமை அன்று பாகிஸ்தான் கடற்படை அரபி கடலில் மூழ்கிய இந்திய கப்பல் ஒன்றில் இருந்த 9 மாலுமிகளை பாகிஸ்தான் கடற்படை மீட்டுள்ளதாக பாக் கடற்படை செய்தி தொடர்பாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜம்னா சாகர் என்ற அந்த இந்திய கப்பலானது ஆகஸ்ட 9ஆம் தேதி 10 மாலுமிகளுடன் அரபி கடலில் பயணித்து கொண்டிருந்த போது மூழ்கியது இதனை தொடர்ந்து உதவி கோரிக்கை விடப்பட்டது.

இதனை தொடர்ந்து பாகிஸ்தான் கடற்படை செயலில் இறங்கியது பாகிஸ்தான் கடல்சார் தகவல் மையம் அருகிலிருந்த MT KRUIBEKE என்ற கப்பலை விபத்து நடைபெற்ற பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தியது.

இதனை தொடர்ந்து விபத்து பகுதிக்கு சென்ற அந்த கப்பல் அங்கு தத்தளித்து கொண்டிருந்த 9 மாலுமிகளை மீட்டது, பின்னர் அவர்களை பாகிஸ்தான் கடற்படையிடம் ஒப்படைத்து விட்டு துபாய் நோக்கிய தனது பயணத்தை தொடர்ந்தது.

பின்னர் பாகிஸ்தான் கடற்படையின் 1 போர் கப்பல் மற்றும் 2 ஹெலிகாப்டர்கள் காணாமல் போன மற்றொரு மாலுமியை தேடிய போது அவரது சடலம் கிடைத்தது அதனையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.