ரஷ்யாவில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி ரஷ்யா செல்லும் NIA , IB அமைப்புகள் !!

ரஷ்யாவின் FSB அமைப்பு இந்தியாவில் ஆளும் கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவரை கொல்ல திட்டமிட்டு இருந்த தற்கொலை படை பயங்கரவாதி ஒருவனை கைது செய்துள்ளதாக செய்தி வெளியிட்டு இருந்தது.

மத்திய ஆசிய நாடு ஒன்றை சேர்ந்த இவன் ISIS இயக்கத்தின் உறுப்பினர் ஆவான், இவன் தற்போது ரஷ்யா அதிகாரிகளின் விசாரணை வளையத்தில் உள்ளான் என ரஷ்யாவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமை NIA மற்றும் இந்தியாவின் உள்நாட்டு உளவு அமைப்பான IB ஆகிய அமைப்புகள் தற்போது இந்த விவகாரத்தில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

விரைவில் மேற்குறிப்பிட்ட இரண்டு அமைப்புகளை சேர்ந்த அதிகாரிகள் குழுக்கள் கைது செய்யப்பட்டுள்ள ISIS பயங்கரவாதியை விசாரித்து மேலதிக தகவல்களை பெறும் பொருட்டு ரஷ்யா செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.