சுதேசி P-17A ரக ஸ்டெல்த் ஃப்ரிகேட் கப்பல்களை அதிக அளவில் வாங்க திட்டமிடும் இந்திய கடற்படை !!

Project 17 Alpha P-17A அல்லது நீலகிரி ரக ஸ்டெல்த் ஃப்ரிகேட் கப்பல்கள் முழுக்க முழுக்க இந்நியாவிலேயே வடிவமைத்து தயாரிக்கப்படுபவை ஆகும், மும்பையில் உள்ள MDL மஸகான் கப்பல் கட்டுமான தளம் மற்றும் கொல்கத்தாவில் உள்ள GRSE கார்டன் ரீச் கப்பல் கட்டுமான தளம் ஆகியவை இவற்றை கட்டமைத்து வருகின்றன.

ஏற்கனவே ஏழு இத்தகைய ஏழு கப்பலகள் மேற்குறிப்பிட்ட இரண்டு நிறுவனங்களால் கட்டப்பட்டு வருகின்றன, அதாவது முதல் நான்கு கப்பல்களை மும்பை மஸகான் கப்பல் கட்டுமான தளமும் கடைசி மூன்று கப்பல்களை கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் கப்பல் கட்டுமானம் மற்றும் பொறியாளர்கள் நிறுவனமும் கட்டமைத்து வருகின்றன.

தற்போது இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து இந்திய கடற்படையிடம் மேலும் அதிக P-17A ரக ஸ்டெல்த் ஃப்ரிகேட் ரக போர் கப்பல்களை வாங்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன, இந்த முறையும் முதல் தொகுதியில் எப்படி கப்பல்களை இரண்டு நிறுவனங்களும் பிரித்து கட்டியதோ அதே போன்று இப்போதும் பங்கிட்டு கட்டி கொடுக்கும் என கூறப்படுகிறது.

இதுகுறித்து MDL மஸகான் கப்பல் கட்டுமான தளத்தின் மேலாண் இயக்குனர் நாராயண் பிரசாத் கூறும்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் 2023-2024 காலகட்டத்தில் இவற்றிற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனவும் அவர் கூறினார்.

இரண்டாவது தொகுதியில் கட்டப்படும் 7 கப்பல்களும் முதல் தொகுதியை சேர்ந்த 7 கப்பல்களை விடவும் சற்றே அதிநவீனமானதாக இருக்கும், அதாவது வடிவமைப்பில் சிறிய மாற்றங்களுடன் கப்பலின் தாக்குதல் வழகாட்டி மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகள் மிகவும் நவீனத்துவம் வாய்ந்தவையாக இருக்கும் எனவும் நம்பத்தகுந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.