75ஆவது சுதந்திர தின விழா 6 கண்டங்களில் கொடியேற்றும் இந்திய கடற்படை !!

  • Tamil Defense
  • August 11, 2022
  • Comments Off on 75ஆவது சுதந்திர தின விழா 6 கண்டங்களில் கொடியேற்றும் இந்திய கடற்படை !!

நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி அண்டார்டிகா தவிர மற்ற 6 கண்டங்கள், 3 பெருங்கடல்களில் 7 இந்திய கப்பல்கள் கொடியேற்ற உள்ளன.

ஆசிய கண்டத்தில் ஒமன் தலைநகர் மஸ்கட்டிற்கு INS CHENNAI சென்னை மற்றும் INS BETWA பெட்வா ஆகிய கப்பல்களும், சிங்கப்பூருக்கு INS SARYU சார்யூ கப்பலும் செல்ல உள்ளன.

ஆஃப்ரிக்க கண்டத்தில் கென்யா நாட்டின் மொம்பாஸா நகருக்கு INS TRIKAND த்ரிகாந்த் கப்பலும், ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு INS SUMEDHA சுமேதா கப்பலும் செல்ல உள்ளன.

வட அமெரிக்க கண்டத்தில் அமெரிக்காவின் சான் டியேகோ நகருக்கு INS SATPURA சத்புரா மற்றும் தென் அமெரிக்காவில் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனைரோ நகருக்கு INS TARKASH ஆகிய கப்பல்கள் பயணிக்க உள்ளன,

கடைசியாக ஐரோப்பா கண்டத்தில் இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டன் மாநகருக்கு இந்திய கடற்படையின் பயிற்சி பாய்மர கப்பலான INS TARANGINI தாரங்கினி பயணிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தந்த நாட்டில் உள்ள இந்திய தூதர்கள் மேற்குறிப்பிட்ட கப்பல்களை வரவேற்பர் பின்னர் குடியரசு தினமன்று அந்தந்த நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் நடைபெறும் குடியரசு தின விழாவில் கடற்படை வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

பின்னர் அந்தந்த நாட்டின் முக்கிய தலைவர்கள் கப்பல்களை பார்வையிட அழைக்கப்படுவர் மேலும் அங்குள்ள இந்திய மக்கள் முன்னர் மூவர்ண கொடி ஏற்றப்பட்டு பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்படும் எனவும்,

இரண்டு உலகப்போர்களில் உயிர்நீத்த இந்திய வீரர்களுக்கு லண்டனில் தாரங்கினி கடற்படை குழுவினரும், கென்யாவில் த்ரிகாந்த் குழுவினரும்,

சிங்கப்பூரில் சார்யூ குழுவினர் க்ரான்ஜி போர் நினைவகம் மற்றும் இந்திய தேசிய ராணுவ நினைவகம் ஆகிய இடங்களில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளனர் என பாதுகாப்பு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.