இந்திய கடற்படையில் புதிய ட்ரோன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

வழக்கமாக ஆளில்லா விமானங்களில் விமானி இருப்பதில்லை ஆனால் தரையில் இருந்து விமானி கணிணி மூலமாக ஆளில்லா விமானத்தை இயக்குவார்.

தற்போது அந்த மாதிரி மனித கட்டளை அல்லது உதவி ஏதுமின்றி பறக்கும் தானியங்கி ஆளில்லா விமானங்கள் அறிமுகமாகி வருகின்றன.

இந்திய கடற்படை அத்தகைய ஒரு ஆளில்லா விமானத்தை தற்போது பெற்றுள்ளது Sagar Defence Engineering
சாகர் பாதுகாப்பு பொறியியல் நிறுவனம் உருவாக்கிய VARUNA வருணா என்கிற ட்ரோன் தான் அது.

இந்த ட்ரோனால் சுமார் 130 கிலோ வரையிலான எடையை சுமக்க முடியும், கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி முன்பு இந்த ஆளில்லா விமானத்தின் செயல்திறன் காட்சிபடுத்தப்பட்டது.

இந்த ஆளில்லா விமானத்தில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன அதாவது ஒரு மனிதர் இந்த விமானத்தில் பயணிக்கலாம், 130 கிலோ எடையை சுமந்து கொண்டு 25 கிலோமீட்டர் தொலைவு வரை பறக்கும் ஆற்றல் கொண்டது.

மேலும் இந்திய கடற்படையின் பல்வேறு கப்பல்களில் இருந்தும் இயங்கும் திறனை கொண்டது இந்திய கடற்படையும் இதன் தயாரிப்பில் உதவியது குறிப்பிடத்தக்கது.