இந்தியாவின் பிரதமர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பொறுப்பு SPG Special Protection Group சிறப்பு பாதுகாப்பு குழு தற்போது இந்திய நாட்டு இன நாய்களை சேர்க்க விரும்புகிறது.
அந்த வகையில் கர்நாடக மாநிலம் முதோல் கிராமத்தை பூர்வீகமாக கொண்ட இரண்டு முதோல் ஹவுண்ட் ரக நாய் ஒன்றை நாய்கள் ஆராய்ச்சி மற்றும் தகவல் மையத்தில் இருந்து பெற்று கொண்டு உள்ளது.
ஏற்கனவே இந்திய விமானப்படை இந்திய தரைப்படை இந்திய கடற்படை துணை ராணுவ படைகள் ஆகியவை இந்த நாய் இனத்தை வெற்றிகரமாக படையில் இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.