நடுத்தர நீர்மூழ்கிகளுக்கான பணிகளை துவங்கியது இந்தியா !!

  • Tamil Defense
  • August 4, 2022
  • Comments Off on நடுத்தர நீர்மூழ்கிகளுக்கான பணிகளை துவங்கியது இந்தியா !!

மும்பையின் (Mazagon Docks Limited – MDL) மஸகான கப்பல் கட்டுமான தளம் நடுத்தர நீர்மூழ்கி கப்பல்களை கட்டுவதற்கான பணிகளை துவங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது நடுத்தர ரக டீசல் எலெக்ட்ரிக் ரக நீர்மூழ்கி கப்பலுக்கான வடிவமைப்பு முடிவுற்று தற்போது Protoype சோதனை வடிவத்தை உருவாக்கும் பணிகள் ஆரம்பித்து உள்ளன.

இந்த நடுத்தர நீர்மூழ்கி கப்பல்களின் எடை நீளம் அகலம் உள்ளிட்ட அளவீடுகள் மற்றும் பிற திறன்கள் பற்றிய தகவல்கள் அனைத்தும் மஸகான் கப்பல் கட்டுமான நிறுவனத்தால் அதிக முக்கியத்துவம் வாய்ந்த ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்திய கடற்படை முதல்கட்டமாக இத்தகைய 2 நீர்மூழ்கி கப்பல்களை வாங்கவும் பின்னர் 4 நீர்மூழ்கிகளை வாங்கவும் இவற்றை சிறப்பு படைகள் செயல்பாட்டுக்கும் கடலோர கண்காணிப்புக்கும் பயன்படுத்தி கொள்ள திட்டமிட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் கலந்து கொள்ளும் தனியார் நிறுவனமான லார்சன் & டூப்ரோ Larsen & Toubro SOV400 எனும் 490 டன்கள் எடை மற்றும் 44மீட்டர் நீளம் கொண்ட நீர்மூழ்கி கப்பலை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.