சுதேசி பயிற்சி விமானத்திற்கு 200 ஏற்றுமதி ஆர்டர்கள் ??

  • Tamil Defense
  • August 6, 2022
  • Comments Off on சுதேசி பயிற்சி விமானத்திற்கு 200 ஏற்றுமதி ஆர்டர்கள் ??

இந்தியாவின் அரசுத்துறை விமான தயாரிப்பு நிறுவனமான HAL Hindustan Aeronautics Limited ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் இந்தியாவிலேயே தயாரித்த பயிற்சி விமானம் HTT-40 ஆகும்.

தற்போது இந்த HTT-40 பயிற்சி விமானங்களில் 70ஐ இந்திய விமானப்படை முதல்கட்டமாக வாங்க வாய்ப்பு உள்ளதாகவும் அதை தொடர்ந்து கூடுதலாக 38 பயிற்சி விமானங்களை வாங்கவும் வாய்ப்பு உள்ளதாகவும் HAL கருதுகிறது.

இது தவிர சுமார் 220 HTT-40 விமானங்களுக்கான ஏற்றுமதி ஆர்டர்கள் கிடைப்பதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளதாக ஹிந்துஸ்தான் ஏரோநாடிகஸ் லிமிடெட் நிறுவன அதிகாரிகள் கருதுகின்றனர் இதற்கு முக்கிய காரணம் இதன் அளவில் உள்ள மற்ற விமானங்களை விடவும் 20% விலை குறைவு என்பதாகும்.