AI திறன் கொண்ட ஆளில்லா விமானங்களை உருவாக்கும் HAL !!

  • Tamil Defense
  • August 8, 2022
  • Comments Off on AI திறன் கொண்ட ஆளில்லா விமானங்களை உருவாக்கும் HAL !!

ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனமானது அதிக உயர பிரதேசங்கள் குறிப்பாக சீன உடனான எல்லையோர பகுதிகளில் பயன்படுத்தும் வகையில் தொலைதூரம் சென்று இயங்கும் ஆளில்லா விமானங்களை உருவாக்கி வருகிறது.

இந்த ஆளில்லா விமானமானது சுய சிந்தனை (Artificial Intelligence) திறன் கொண்ட ஆளில்லா விமானங்கள் மிகவும் அதிநவீனமான தொழில்நுட்பங்களை கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஹெலிகாப்டர் போன்ற ஆளில்லா விமானங்கள் சுமார் 40 கிலோ எடையை சுமக்கும் எனவும் குறிப்பாக சென்சார்கள் ஏவுகணைகள் போன்றவற்றை சுமந்து சென்று நடவடிக்கையில் ஈடுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த ஆண்டு இடையில் இந்த ஆளில்லா விமானத்தை சோதனை செய்ய ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் முடிவு செய்துள்ளது இது தாக்குதல் மட்டுமின்றி போக்குவரத்து ரோந்து கண்காணிப்பு ஆகிய பணிகளையும் மேற்கொள்ள வல்லது.