சுதந்திர தின விழா; 30 கிலோமீட்டர் உயரத்தில் விண்வெளிக்கு மிக அருகே பறக்க விடப்பட்ட தேசிய கொடி !!
திங்கட்கிழமை அன்று சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது, சுமார் 75 ஆண்டுகள் நிறைவானதை முன்னிட்டு 30 கிலோமீட்டர் உயரத்தில் வானில் விண்வெளிக்கு மிக அருகே இந்திய தேசிய கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.
Space Kidz எனும் இந்திய தனியார் நிறுவனம் இதனை செய்துள்ளது, இந்த நிறுவனம் இந்திய குழந்தைகளிடையே விண்வெளி பற்றிய அறிவை கொண்டு சேர்த்து விண்வெளி சாரந்த ஆர்வத்தை தூண்டுவதை தன் இலக்காக கொண்டுள்ளது.
சமீபத்தில் இஸ்ரோ ஏவிய SSLV ராக்கெட்டில் இந்த நிறுவனம் நாடு முழுவதும் சுமார் 750 பள்ளி குழந்தைகளை தேர்வு செய்து அவர்களை கொண்டு உருவாக்கிய சிறிய செயற்கைகோள் ஒன்றை ஏவியதும் ஆனால் துரதிர்ஷ்டவசமாக ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் செயல்படாமல் போனதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வு பற்றி Space Kidz நிறுவனம் கூறுகையில் இந்தியாவின் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு உயிர் நீத்த ஒவ்வொரு சுதந்திர போராட்ட வீரருக்கும் மரியாதை செய்யும் விதமாக தேசிய கொடி பறக்க விடப்பட்டதாக தெரிவித்துள்ளது.