அமெரிக்காவில் உள்ள இந்திய ராணுவ பிரதிநிதி பொறுப்பில் உள்ள அதிகாரிகளுக்கு அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகனில் செல்ல கட்டுபாடற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனை அமெரிக்க விமானப்படை செயலாளர் ஃப்ராங்க் கென்டால் தெரிவித்தார் மேலும் அவர் இது இந்தியாவுடனான எங்களது ஒத்துழைப்பு நெருக்கம் மற்றும் இந்தியா மீதான நம்பிக்கைக்கு அடையாளம் எனவும் அவர் கூறினார்.
திங்கட்கிழமை அமெரிக்காவில் இந்திய தூதரகத்தில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரண்ஜீத் சிங் சந்து தலைமையில் நடைபெற்ற சுதந்திர தின விழா விருந்தின் போது அதில் கலந்து கொண்ட அமெரிக்க விமானப்படை செயலாளர் ஃப்ராங்க் கென்டால் இதனை தெரிவித்தார்.
மேலும் அவர் பேசும்போது இது என்ன அவ்வளவு பெரிய விஷயமா என நீங்கள் நினைத்தால் ஒன்றை சுட்டி காட்ட கடமைப்பட்டுள்ளேன் அதாவது அமெரிக்க விமானப்படையின் செயலாளரான என்னால் கூட இப்படி பெண்டகனில் நுழைய முடியாது என்றார்.
அமெரிக்கா தற்போது உலகில் வேறேந்த நாடுகளை விடவும் இந்தியாவுடன் தான் அதிகமாக ராணுவ பயிற்சிகளை இணைந்து மேற்கொண்டு வருவதாகவும் கடந்த காலங்களில் இந்தியா உடனான நெருக்கத்தை அதிகரிக்கவும் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தவும் முடிந்திருப்பதாகவும்
பாதுகாப்பு தொழில்நுட்ப வர்த்தகம் பெரும் வளர்ச்சி கண்டுள்ளதாகவும், ஆளில்லா விமான தொழில்நுட்பம் உள்ளிட்ட பல திட்டங்களில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து பணியாற்றி வருவதாகவும் அவர் பேசினார்.