நீர்மூழ்கி டென்டரில் மாற்றம் செய்த இந்திய பாதுகாப்பு அமைச்சகம் !!

இந்திய கடற்படையின் நீர்மூழ்கி கப்பல்களுக்கான டென்டரில் உள்ள விதிமுறைகள் காரணமாக பல நிறுவனங்கள் வெளியேறி ஒப்பந்தம் எவ்வித முன்னேற்றத்தையும் காணாத நிலையில் தற்போது அதில் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.

அதாவது சில விதிமுறை மாற்றங்களை செய்வதன் மூலமாக இந்த டென்டரில் முன்னேற்றம் காண முடியும் என கூறப்படுகிறது, அதே நேரத்தில் கப்பல்களின் திறனில் எவ்வித சமரசமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திட்டத்தில் இருந்து Joint & Severe liability எனும் நிபந்தனை மாற்றியமைக்கப்பட உள்ளது, ஆகவே இனி இந்தியாவில் கப்பல் கட்டுமான மேற்கொள்ளும் நிறுவனம் தான் அனைத்திற்கும் பொறுப்பேற்க வேண்டும்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்திய கடற்படை பிரதமர் அலுவலகம் மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் ஆகியவற்றிற்கு இந்த திட்டத்தின் கப்பல்கள் இந்தியாவிலேயே மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் என உறுதி அளித்துள்ளது.

Project 75 அதாவது திட்டம் -75 இன் கீழ் தயாரிக்கப்படும் ஆறு நீர்மூழ்கி கப்பல்களும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு ஏற்றுமதியும் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.