அமெரிக்க போர் விமானத்திற்கான பாகங்களை சப்ளை செய்யும் பணியை துவங்கிய இந்திய நிறுவனம் !!

பெங்களூர் நகரை தளமாக கொண்டு இயங்கும் Dynamatic Technologies டைனமாடிக் டெக்னாலஜிஸ் எனும் நிறுவனத்திற்கு கடந்த ஆண்டு புதிய அதிநவீன போர் விமானமான F15 EX Eagle 2 விமானத்திற்கு தேவையான பாகங்களை தயாரித்து கொடுக்கும் ஒப்பந்தத்தை வழங்கியது.

அமெரிக்காவின் Boeing போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் இந்த விமானத்திற்கான பாகங்களின் டெலிவரியை Dynamtic Technologies நிறுவனம் Aerostructure க்கான முக்கிய பாகங்களின் டெலிவரியை பெங்களூர் நகரில உள்ள தங்களது தொழிற்சாலையில் இருந்து துவங்கி உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் போயிங் நிறுவனத்தின் சப்ளை பிரிவு துணை தலைவரான பியர்ஸ் லெர், போயிங் இந்தியா மூத்த இயக்குனர் அஷ்வனி பார்காவா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Boieng போயிங் நிறுவனம் தயாரிக்கும் F15 EX Eagle 2 போர் விமானத்தை இந்திய விமானப்படையின் 114 பல திறன் போர் விமான டென்டரில் MRFA போட்டியில் களமிறக்கி உள்ளதும் குறிப்பிடத்தக்கது, இதில் வெற்றி பெற்றால் அனைத்து விமானங்களையும் மேற்குறிப்பிட்ட நிறுவனம் போன்ற பல இந்திய நிறுவனங்களை கொண்டு இந்தியாவிலயே தயாரித்து வழங்க போயிங்கால் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னர் McDonell Douglas நிறுனவனத்தால் தயாரிக்கப்பட்ட F-15 A போர் விமானத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவம் தான் இந்த F 15 EX Eagle 2 ஆகும் அதனை விடவும் இது ஏவியானிக்ஸ் உள்ளிட்ட பல அதிநவீன அமைப்புகளை கொண்டிருக்கும் என்பது இதன் சிறப்பம்சம் ஆகும்.