மேலதிக அபாச்சி AH-64E APACHE தாக்குதல் ஹெலிகாப்டர்கள் வாங்க பேச்சுவார்த்தை !!

  • Tamil Defense
  • August 1, 2022
  • Comments Off on மேலதிக அபாச்சி AH-64E APACHE தாக்குதல் ஹெலிகாப்டர்கள் வாங்க பேச்சுவார்த்தை !!

அமெரிக்காவிடம் இருந்து மேலும் 11 AH-64E APACHE தாக்குதல் உலங்கு வானூர்திகளை இந்திய தரைப்படைக்கு வாங்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தகவலை APACHE தாக்குதல் உலங்கு வானூர்திகளை தயாரிக்கும் BOEING நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவது உண்மை தான் என உறுதிப்படுத்தி உள்ளார்.

ஏற்கனவே ஆர்டர் கொடுக்கப்பட்ட 39 APACHE ஹெலிகாப்டர்களில் 22 ஹெலிகாப்டர்களை இந்திய விமானப்படை பெற்று கொண்டதும் மீதமுள்ளவை இந்திய தரைப்படைக்கு செல்லும் எனவும் அது தவிர 2020ஆம் ஆண்டு கூடுதலாக 6 ஹெலிகாப்டர்களை வாங்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.