இஸ்ரேலிய ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளை லடாக்கில் சோதனை செய்யும் இந்திய தரைப்படை !!

இந்திய தரைப்படை லடாக்கில் D-Fence Solutions எனப்படும் இஸ்ரேலிய நிறுவனம் தயாரித்த EnforceAir எனப்படும் ஆளில்லா விமான எதிர்ப்பு அமைப்பை லடாக்கில் சோதனை செய்து வருகிறது.

இந்த அமைப்பானது உலகின் மிகவும் சக்திவாய்ந்த ஆளில்லா விமான எதிர்ப்பு ரேடியோ அலைவரிசைகளை வெளிபடுத்தும் திறன் கொண்டதாகும், இந்த அமைப்பானது தானாகவும் (Autonomous) மற்றும் மனிதர்களால் கட்டுபடுத்தவும் (Manual) கூடியது என கூறப்படுகிறது.

EnforceAir UCAS ஆளில்லா விமான எதிர்ப்பு அமைப்பு ஆளில்லா விமானங்களை கண்டுபிடித்து ரேடியோ அலைவரிசைகளை வெளிபடுத்தி அவற்றை தனது கட்டுபாட்டில் கொண்டு வந்து தரையிறங்க செய்யும் இது நகரங்கள் திறந்தவெளி பகுதிகள், காடுகள் மலைப்பகுதிகளிலும் திறம்பட இயங்கும் தன்மை கொண்டதாகும்.

மேலும் இந்த EnforceAir ஆளில்லா விமான எதிர்ப்பு அமைப்பானது IFF Identification Friend or Foe எனும் அமைப்பையும் தன்னகத்தே கொண்டுள்ளது அதாவது இதன் மூலம் எதிரி மற்றும் நமது ஆளில்லா விமானங்களை பிரித்தறிந்து அதற்கேற்ப செயல்படும் திறன் இதற்கு உண்டு என்பது இதன் சிறப்பாகும்.

இந்த EnforceAir UCAS ஆளில்லா விமான எதிர்ப்பு அமைப்பானது இந்திய தரைப்படையின் சோதனைகளில் வெற்றி பெற்றால் சீனா மற்றும் பஞ்சாப் காஷ்மீர் பகுதிகளில் உள்ள பாகிஸ்தான் எல்லையோரம் நிலைநிறுத்தப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக இந்திய தரைப்படை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.