மேம்படுத்தப்பட்ட பினாகா பல்குழல் ராக்கெட் அமைப்பு வெற்றிகரமாக சோதனை !!

  • Tamil Defense
  • August 31, 2022
  • Comments Off on மேம்படுத்தப்பட்ட பினாகா பல்குழல் ராக்கெட் அமைப்பு வெற்றிகரமாக சோதனை !!

இந்திய தரைப்படை மேம்படுத்தப்பட்ட அதாவது தாக்குதல் தொலைவு நீட்டிக்கப்பட்ட புதிய பினாகா பல்குழல் ராக்கெட்டுகளை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

இந்த சோதனைகள் கடந்த சில வாரங்களாக ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோர் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பொக்ரான் நகரில் நடைபெற்றது, இந்த சோதனையின் வெற்றி மூலமாக அதிக தூரம் செல்லக்கூடிய ராக்கெட்டுகளை ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்வது குறையும் என கூறப்படுகிறது.

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான Munitions India Limited, நாக்பூர் நகரத்தை தளமாக கொண்ட Economic Explosives Limited (EEL) நிறுவனம் மற்றும் DRDO பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை இணைந்து மேற்குறிப்பிட்ட ராக்கெட்டுகளை வடிவமைத்து தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய மேம்படுத்தப்பட்ட அதாவது தொலைவு நீட்டிக்கப்பட்ட பினாகா ராக்கெட்டுகள் 45 கிலோடமீட்டர் தொலைவு பாயக்கூடியவை ஆகும் முந்தைய பினாகா ராக்கெட்டுகள் வெறுமனே 35 கிலோமீட்டர்கள் தொலைவு மட்டுமே செல்லும் என்பது கூடுதல் தகவல்.